“கல்லூரி நிர்வாகம் பெற்றோருக்குச் சொன்ன ஒற்றைத் தகவல்…” விடுதி அறையில் 16 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கல்லூரி நிர்வாகம் பெற்றோருக்குச் சொன்ன ஒற்றைத் தகவல்…” விடுதி அறையில் 16 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு… நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

ஹைதராபாத் பால்கம்பேட்டை பகுதியில் உள்ள விடுதி அறையில், 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்டர்மீடியட் முதலாமாண்டு படித்து வந்த ஹர்ஷியா சுல்தானா என்ற மாணவியே விபரீத முடிவை எடுத்துள்ளார். அந்த மாணவி இளைஞர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த கல்லூரி நிர்வாகத்தினர், இது குறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், ஹர்ஷியா சுல்தானாவைக் கண்டித்துள்ளார். தாயார் திட்டியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, விடுதியில் இருந்த தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த எஸ்.ஆர். நகர் காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in