அரசியலில் குதிக்கும் தனுஷ்..? அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் போட்ட பச்சைக்கொடி… ஓபனாக அழைப்பு விடுத்த நயினார் பாலாஜி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அரசியலில் குதிக்கும் தனுஷ்..? அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் போட்ட பச்சைக்கொடி… ஓபனாக அழைப்பு விடுத்த நயினார் பாலாஜி..!!

Published

on

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில், தமிழக அரசியல் களத்தில் அவருக்கு அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஒருவேளை தனுஷ் அரசியலுக்கு வந்து பாஜகவை ஆதரித்தால் அது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என பாஜக மாநில விளையாட்டுப் பிரிவுத் தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரனின் மகனான நயினார் பாலாஜி வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தனுஷின் அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

Advertisement

முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியும் தனுஷ் குறித்து இதே போன்றதொரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் அவரை மனப்பூர்வமாக வரவேற்போம் என அவர் கூறியிருந்த நிலையில், தற்போது பாஜக தரப்பிலிருந்தும் தனுஷுக்கு ஆதரவுக் குரல் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in