வரலாறு காணாத மதிப்பெண்களுடன் ‘டாப்பர்’… கடைசியில் காவல் நிலையத்தில் மாணவர் அளித்த பகீர் வாக்குமூலம்…!! – cinefeeds
Connect with us

CRIME

வரலாறு காணாத மதிப்பெண்களுடன் ‘டாப்பர்’… கடைசியில் காவல் நிலையத்தில் மாணவர் அளித்த பகீர் வாக்குமூலம்…!!

Published

on

தென்கொரியாவில் தேசிய அளவிலான சான்றளிக்கப்பட்ட வரி கணக்காளர் போட்டித் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் ஒருவர், தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைகேடாகத் தேர்வில் வெற்றி பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இத்தேர்வில் வரலாறு காணாத வகையில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த ஹான் என்ற அந்த மாணவர், நுண்ணிய கேமரா மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்வில் மோசடி செய்ததை பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு, சியோல் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தையும் அளித்துள்ளார்.

Advertisement

கடுமையாகப் படித்து எழுதப்படும் இத்தகைய முக்கியத் தேர்வுகளில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் முறைகேடு நடந்துள்ளது தென்கொரியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டின் முக்கியக் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் நெருங்கும் வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால், தேர்வுகளில் ஏஐ முறைகேடுகளைத் தடுப்பதற்கான தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தென்கொரிய அரசு இறங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in