LATEST NEWS
மூளை முதல் முழங்கால் வரை.. லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் மரண வழக்கில் பகீர் கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.. தீவிரமடையும் விசாரணை..!!
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், அவரது கழுத்தில் 27 சென்டிமீட்டர் நீளத்திற்குக் கயிற்றுத் தடம் இருப்பதாகவும், அதற்குக் கீழே 3 சிராய்ப்பு காயங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாலகிருஷ்ணனின் வலது தோள்பட்டை, இடது முழங்கால் மற்றும் இடது கையின் பின்புறத்திலும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர, அவரது உடலில் 5 இடங்களில் ரத்தக்கசிவு காயங்கள் இருப்பதுடன், மூளை மற்றும் நுரையீரலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதும் பிரேத பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.
உடலில் பல்வேறு காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த மரணம் குறித்த சந்தேகங்கள் வலுத்துள்ளன. இதையடுத்து, செக்கானூரணி காவல் நிலைய மரணம் தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
