LATEST NEWS
வேட்டைக்காரனே இரையானான்… நாகப்பாம்பை லாவகமாக விழுங்கிய தவளை… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகூடம் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக பாம்புதான் தவளையை இரையாக்கிக் கொள்ளும் என்பதை நாம் அறிவோம்; ஆனால் இதற்கு மாறாக, ஒரு பெரிய தவளை நாகப்பாம்பை முழுமையாக விழுங்கியுள்ளது.
புர்கம்பாடு பகுதியில் உள்ள குண்டே சமையா என்பவரின் வீட்டின் முன்றலில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் வெளியே வந்து பார்த்தபோது, அங்குள்ள வடிகால் பகுதிக்கு அருகில் ஒரு பெரிய தவளை நாகப்பாம்பை விழுங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த அரிய மற்றும் வியக்கத்தக்க நிகழ்வை அங்கிருந்த கிராம மக்கள் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
