வாறே வா..! “மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது!” – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி சவால்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாறே வா..! “மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது!” – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி சவால்..!!

Published

on

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது எனவும், கர்நாடக அரசியல்வாதிகள் அரசியலுக்காகப் பேசிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு மின் தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்பத் திட்டமிட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், மாநிலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மின்சாரத்துறையின் அனைத்துப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருவதோடு, எரிசக்தியில் இந்தியா அடுத்த கயானா நாட்டைப் போல் மாறும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்ட நிகழ்வில் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த நிர்மல்குமார், அந்த நிகழ்வில் மின்சாரத்தைத் துண்டித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in