LATEST NEWS
என்ன நினைச்சிட்டு இருக்கீங்க..? “பதவி பறிக்கப்படும் பாத்துக்கோங்க” த.வெ.க நிர்வாகிகளுக்கு அமைச்சர் என். ஆனந்த் கடும் எச்சரிக்கை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பொதுச்செயலாளரும், தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்த், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள் எவரேனும் தவறாக நடப்பதோ, அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதோ அல்லது கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களது கட்சிப் பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என்று என். ஆனந்த் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
- தமிழகத்தில் ஒரு நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றத்திற்காகவே மக்கள் தங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர் என்பதை அனைத்து நிர்வாகிகளும் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாகவே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சாலைகளில் பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் எனத் த.வெ.க தலைமை அறிவுறுத்தியிருந்தது. ஆளுங்கட்சி என்ற பொறுப்புணர்வுடன் மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதே கட்சித் தலைமையின் முக்கிய உத்தரவாக உள்ளது.
