அச்சச்சோ..! 7 வருஷம் ஏமாற்றிய போலி ‘ஸ்பெஷலிஸ்ட்’… சிறுவனின் வாழ்க்கையைக் கேவலமாக்கிய எம்பிபிஎஸ் டாக்டர்..! நுகர்வோர் ஆணையம் கொடுத்த மரண அடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அச்சச்சோ..! 7 வருஷம் ஏமாற்றிய போலி ‘ஸ்பெஷலிஸ்ட்’… சிறுவனின் வாழ்க்கையைக் கேவலமாக்கிய எம்பிபிஎஸ் டாக்டர்..! நுகர்வோர் ஆணையம் கொடுத்த மரண அடி..!!

Published

on

மத்திய பிரதேசம் குவாலியரில், தோல் நோய் நிபுணர் பட்டம் இல்லாமல், 7 ஆண்டுகளாக சிறுவனுக்கு சிகிச்சை அளித்த எம்பிபிஎஸ் மருத்துவருக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சிகிச்சையின் போது சிறுவனின் தலைமுடி உதிர்ந்ததுடன், கண் பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டில் தொடங்கியது. கியாஸ் மண்டி பகுதியைச் சேர்ந்த மோனு ரத்தோர் என்பவர், தன் மகனின் தலையில் முடி குறைவாக உள்ள பிரச்சனைக்காக டாக்டர் குல்தீப் சக்சேனா என்பவரின் கிளிணிக்குக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் சிகிச்சை அளித்து ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் மருந்துகளை வழங்கி வந்தார். குடும்பத்தினரின் கூற்றுப்படி, சுமார் 7 ஆண்டுகள் சிகிச்சை தொடர்ந்தும், சிறுவனின் தலையில் முடி வளர்வதற்குப் பதிலாக இருந்த மீதமுள்ள முடியையும் முற்றிலுமாக உதிர்ந்துவிட்டது.

Advertisement

மருந்தின் பக்க விளைவுகளால் சிறுவனின் கண் பார்வை குறைந்து, கண் கோளாறு ஏற்பட்டதாக தந்தை குற்றம் சாட்டினார். இதுகுறித்து தகவல்களைக் மருத்துவரிடம் விளக்கம் கேட்டபோது, தகாத முறையில் நடந்து கொண்டனர். இதனையடுத்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அந்த மருத்துவர் எம்பிபிஎஸ் மட்டுமே முடித்தவர் என்பதும், அவரிடம் தோல் நோய் தொடர்பான எந்தப் பட்டமும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனை விசாரித்த நுகர்வோர் ஆணையம், மருத்துவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in