“அய்யயோ.. மனைவியின் கண்முன்னே கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்தக் குடும்பம் செய்த காரியத்தைப் பாருங்கள்.. குவியும் பாராட்டுக்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யயோ.. மனைவியின் கண்முன்னே கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்தக் குடும்பம் செய்த காரியத்தைப் பாருங்கள்.. குவியும் பாராட்டுக்கள்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம், மல்லியால் மண்டலத்திற்கு உட்பட்ட நூக்கப்பள்ளி பகுதியில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மல்லய்யா என்ற முதியவர் மீது, கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் தாக்கத்தில் அந்த முதியவர் தூக்கி வீசப்பட்டு, தனது மனைவியின் கண்முன்னே துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நெஞ்சை உலுக்கும் விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது கணவர் கண்முன்னே உயிரிழந்த பேரிடியிலும், மல்லய்யாவின் குடும்பத்தினர் காட்டிய மனிதநேயம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மீள முடியாத அந்தத் துயரத்திலும், மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக மல்லய்யாவின் கண்களைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர். துக்கத்திலும் பிறருக்கு உதவ நினைத்த அந்தக் குடும்பத்தினரின் உயரிய பண்பைப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in