“இனிமேல் என்னை நான் கைவிட மாட்டேன்..” விவாகரத்தை தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பெண்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனிமேல் என்னை நான் கைவிட மாட்டேன்..” விவாகரத்தை தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பெண்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் புகைப்படம்..!!

Published

on

தென் கொரியாவில் திருமண பந்தம் என்பது மதிப்புமிக்க ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. மேலும் திருமணமான பெண்கள் தங்களது திருமண வாழ்க்கையை மிகவும் புனிதமாக கருதி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தென் கொரியாவில் 37 வயதான சோ சியுங் என்பவர் தனது திருமண பந்தத்தை முறிக்கும் வகையில், தனது தோழிகளுடன் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியை ஒரு திருமண வரவேற்பு நிகழ்வை போன்று அலங்காரம் செய்து, அதில் வெள்ளை நிற ஆடையுடன் இளம்பெண் தோன்றினார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட மேசையில் மேல் இருந்த கேக்கை வெட்டி, தனது முறிந்த திருமண பந்தத்தை இளம்பெண் கொண்டாடினார்.

இதுகுறித்து இளம்பெண் கூறுகையில், அன்பை பெறுவதற்காக இனி நான், என்னை தாழ்த்தி கொள்ளமாட்டேன் என கூறினார். என்ன நடந்தாலும் சரி, நான் மீண்டும் ஒருபோதும் என்னை கைவிட மாட்டேன் என கூறினார். மேலும், தென்கொரியாவில் விவாகரத்து பெற்ற பெண்களை சுற்றியுள்ள களங்கத்தை எதிர்த்து போராடுவதும், திருமண அழைப்புக்கு அப்பாற்பட்டு தனது அடையாளத்தை மீட்டெடுப்பதுமே தனது நோக்கம் எனவும் அவர் கூறினார். திருமணமாகி 10 வருடத்தில் இளம்பெண் தனது கணவரை பிரிந்து, அதனை சமூக வலைதளத்தில் கொண்டாட்டமாக பகிர்ந்துள்ள நிகழ்வு இணையத்தில் பயனர்களிடம் விவாதத்தை எழுப்பியுள்ளது.

Advertisement

இதுகுறித்து பயனர்கள் வெளியிட்ட பதிவில், விவாகரத்து என்பது தனிப்பட்ட விஷயம் என்றும், இதனை ஏன் பொதுவெளியில் கொண்டாட வேண்டும் எனவும் பயனர்கள் கேள்வி எழுப்பினர். மற்றொரு பயனர், விடுதலைக்கு வாழ்த்துகள் என்றும் புதிய தொடக்கங்களை வரவேற்பதாகவும் பதிவிட்டார். மேலும் இது அருமையான யோசனை என்றும், இது மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் பதிவிட்டார். திருமணத்தை போலவே விவாகரத்தும் இயல்பானதுதான்; எனவே, விவாகரத்தை இயல்பாக்குவது என்பது அதனை ஊக்குவிப்பது அல்ல, மாறாக விவாகரத்து பெற்ற ஒருவரின் வாழ்க்கையை காட்டுவதே ஆகும் என பதிவிட்டனர். விவாகரத்து பெற்று தமக்கென ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, அதை இவ்வளவு அழகாக வெளிப்படுத்தும் ஒருவரை நான் ஆதரிக்கிறேன், வாழ்த்துகள் என பதிவிட்டனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in