அதிர்ச்சியில் பெண்கள்..! மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்…? தமிழக அரசு விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சியில் பெண்கள்..! மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம்…? தமிழக அரசு விளக்கம்..!!

Published

on

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. குறிப்பாக, புதிதாக இணைக்கப்பட்ட 17 லட்சம் பயனாளிகளில் 50 சதவீதம் பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 15-ஆம் தேதி அன்று 1,29,97,568 தகுதியான மகளிரின் வங்கிக் கணக்குகளில் தலா 1,000 ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்த்துப் புதுப்பிக்கும் பணிகள் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை மட்டுமே என்றும், இதனால் தகுதியான பயனாளிகள் யாரும் தேவையற்ற வதந்திகளை நம்பி அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement

இருப்பினும், அரசின் இந்த விளக்கத்திற்கு மத்தியிலும், வழக்கமாகப் பணம் பெற்று வந்த தங்களுக்கு இந்த மாதம் 1,000 ரூபாய் வரவு வைக்கப்படவில்லை எனப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். வங்கித் தொழில்நுட்பக் கோளாறுகளா அல்லது வேறு ஏதேனும் நிர்வாகக் காரணங்களா என்பது குறித்துத் தெளிவுபடுத்தி, விடுபட்டவர்களுக்கு உடனடியாகத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in