LATEST NEWS
“தவறு நடந்திருந்தால் உடனே நடவடிக்கை எடுங்கள்..” தவெக எம்எல்ஏ விவகாரத்தில் திருமாவளவன் போட்ட அதிரடி குண்டு… கூட்டணிக் கட்சியே போர்க்கொடி தூக்கியதால் உச்சகட்ட பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான சர்ச்சை விவகாரத்தில், தவறு நடந்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் வெளிவந்த ஆரம்பக் கட்டத்திலிருந்தே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
ஏற்கெனவே, சர்ச்சையில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனும் இந்த விவகாரத்தில் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரியிருப்பது, ஆளும் அரசுக்கு அரசியல் ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
