LATEST NEWS
“சாட்டை துரைமுருகனுக்கு ஒரு நீதி… அருள் விக்னேஷுக்கு ஒரு நீதியா..?” தவெக-வைச் சுற்றி வளைக்கும் புதிய சர்ச்சை.. அரசியல் வட்டாரத்தில் எழுந்த சரமாரி கேள்விகள்..!!
தனிஷ்க் நகைக்கொள்ளை வழக்கில் கைதான மீனாட்சி என்பவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறியதற்காக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும், அவர் தொடர்ந்து தவெக-வை விமர்சித்து வந்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மற்ற கட்சியினர் மீது காட்டப்படும் இந்த உடனடி வேகம், சர்ச்சைக்குரிய அருள் விக்னேஷ் விவகாரத்தில் ஏன் காட்டப்படவில்லை என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில், அருள் விக்னேஷ் தொடர்பான விவகாரத்தைத் தேசிய மகளிர் ஆணையமும் தற்போது கையில் எடுத்துள்ளதால், இவ்விவகாரம் தீவிரமடைந்துள்ளது. சாட்டை துரைமுருகன் மீதான நடவடிக்கையை ஒப்பிட்டு எழும் விமர்சனங்களும், தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடும் சேர்ந்து தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
