LATEST NEWS
அய்யோ கொடுமையே..! தேனிலவு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்.. 2 மாத போராட்டத்திற்குப் பிறகு புதுப்பெண் பரிதாப பலி.. சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்..?!
டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள சித்தோங் பகுதியில் தேனிலவு சென்றிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயமடைந்த இளம்பெண், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை (நவம்பர் 19) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சோப்ராவைச் சேர்ந்த நிகிதா சாஹா என்ற அப்பெண், தனது கணவர் சமீருடன் கடந்த செப்டம்பர் 13 அன்று சித்தோங்கில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் தங்கியிருந்தபோது இரவு நேர பார்பிக்யூ நிகழ்ச்சியின்போது தீ விபத்தில் சிக்கியுள்ளார். முதலில் சிலிகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமடைந்ததால் மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கு ஹோம்ஸ்டே நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று கணவர் சமீர் குற்றம் சாட்டியுள்ளார்; நெருப்புக்கு அருகில் எண்ணெய் டிரம் பயன்படுத்தப்பட்டதால் திடீரென தீ பற்றி எரிந்ததில், தனது மனைவியின் உடலில் சுமார் 60 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹோம்ஸ்டே நிர்வாகம் மறுத்துள்ளது. நெருப்பில் திரவத்தை ஊற்றியதாக சிசிடிவி காட்சிகளில் பதிவான நபர் தங்கள் ஊழியர் அல்ல என்றும், தம்பதியினர் குளிராக இருப்பதாகக் கூறி மூன்றாவது நபரை அழைத்து மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பெரிதாக்கச் சொன்னதாகவும் ஹோம்ஸ்டே உரிமையாளர் நேஹால் தெரிவித்துள்ளார்.
நெருப்புக்கு மிக அருகில் அமர வேண்டாம் என்று தம்பதியினருக்குப் பலமுறை எச்சரிக்கை விடுத்ததாகவும், ஊழியர்கள் இரவு உணவை ஏற்பாடு செய்யச் சென்ற 15 முதல் 20 வினாடிகளில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், அந்த இளம்பெண் நைலான் ஆடை அணிந்திருந்ததால் தீ வேகமாகப் பரவியதாக ஹோம்ஸ்டே தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளில் தம்பதியினர் பார்பிக்யூ முன்பு அமர்ந்திருந்தபோது திரவம் ஊற்றப்பட்டதும் தீ திடீரெனப் பற்றியது பதிவாகியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
