செருப்பு போடாம வி.எஸ் பாபு உடலை சுமந்த பாசம்… அந்த 41 பேர் விஷயத்தில் மட்டும் எங்கே போச்சு..? விஜயை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செருப்பு போடாம வி.எஸ் பாபு உடலை சுமந்த பாசம்… அந்த 41 பேர் விஷயத்தில் மட்டும் எங்கே போச்சு..? விஜயை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்..!!

Published

on

வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் விஜய் காலணி அணியாமல் அவரது உடலைச் சுமந்து சென்றது வெறும் அரசியல் வேஷம் அல்ல, அது உண்மையான பாசம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தலைவர்களின் இத்தகைய நெகிழ்ச்சியான அணுகுமுறை வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம், இதேபோன்ற அக்கறையையும் மரியாதையையும் கரூரில் உயிரிழந்த 41 பேருக்கும் முதல்வர் விஜய் காட்டியிருந்தால், அவர் மக்களால் இன்னும் பெரிதும் போற்றப்பட்டிருப்பார் என்று ஆர்.பி.உதயகுமார் சுட்டிக்காட்டியுள்ளார். துயரச் சம்பவங்களின்போது காட்டப்படும் எதிர்வினைகள் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்பதே தனது கருத்து என அவர் கூறினார்.

Advertisement

கரூர் சம்பவத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல் 72 நாட்கள் வீட்டிலேயே முடங்கியிருந்ததை நினைவூட்டிய அவர், எதிர்காலத்தில் இத்தகைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். சாதி, மத, அரசியல் வேறுபாடின்றி அனைவரிடமும் ஒரே மாதிரியான மனிதநேய அணுகுமுறையை முதல்வர் விஜய் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in