ரயிலில் அடையாளமே இல்லாத சடலம்.. காட்டிக் கொடுத்த பாம்பு மோதிரம்.. குஜராத் முதல் நாகர்கோவில் வரை நீண்ட ட்விஸ்ட்… 6 மணி நேரத்தில் சிக்கிய குற்றவாளி..! – cinefeeds
Connect with us

CRIME

ரயிலில் அடையாளமே இல்லாத சடலம்.. காட்டிக் கொடுத்த பாம்பு மோதிரம்.. குஜராத் முதல் நாகர்கோவில் வரை நீண்ட ட்விஸ்ட்… 6 மணி நேரத்தில் சிக்கிய குற்றவாளி..!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நவம்பர் 13 அன்று ரெயில்வே நிலையத்தில் பயன்படுத்தப்படாத பெட்டி ஒன்றினுள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத 54 வயது பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர். நள்ளிரவில் ரெயில் பெட்டியை சுத்தம் செய்வதற்காகச் சென்ற ரெயில்வே ஊழியர் ஒருவர், இறந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தைக் கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சடலத்தைக் கைப்பற்றிய போலீசாருக்கு அப்பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், குற்றச்சம்பவம் நடந்த இடத்தில் பாம்பு உருவம் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்றைக் கைப்பற்றினர். அந்த மோதிரத்தில் இருந்த ஹால்மார்க் முத்திரை விவரங்களைக் கொண்டு அது குஜராத்தில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்த போலீசார், அங்கிருந்த விற்பனையாளர்கள் மூலம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சில்லறை விற்பனையாளருக்கு வழங்கப்பட்டதை உறுதி செய்தனர்.

Advertisement

தொடர்ந்து, மோதிரம் வாங்கியபோது வழங்கப்பட்ட பான் எண் விவரங்களை வைத்து மத்தியப் பிரதேச முகவரியைக் கண்டறிந்து போலீசார் அணுகியபோது, அந்தப் பெண் கடந்த மூன்று மாதங்களாகத் தனது சொந்த ஊரில் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதற்கிடையே ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்ததில், அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் அந்தக் குறிப்பிட்ட பெட்டியில் இருந்து வெளியே வருவதைக் போலீசார் கண்டறிந்தனர்.

பின்னர் அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், சம்பவத்தன்று அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையைப் போலீசார் மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் சந்தேக நபரைக் கைது செய்துவிட்டதாகவும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து உறவினர்கள் வந்துள்ளதாகவும், உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in