அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி..! தவெகவில் இணையும் தென் சென்னை முக்கிய நிர்வாகி – இபிஎஸ்-க்கு தொடரும் நெருக்கடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி..! தவெகவில் இணையும் தென் சென்னை முக்கிய நிர்வாகி – இபிஎஸ்-க்கு தொடரும் நெருக்கடி..!!

Published

on

அதிமுகவில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது தமிழக அரசியலில், குறிப்பாகச் சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், அதிமுகவின் தென் சென்னை மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த R. கலைமுருகன், அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் சென்னை பகுதியில் அதிமுகவின் முக்கியத் தொண்டர் பலத்தைக் கொண்ட நிர்வாகிகளில் ஒருவராக இவர் அறியப்படுகிறார்.

இதற்கு முன்னதாக, வடசென்னை அதிமுக மாவட்டச் செயலாளராகவும், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்ட RS ராஜேஷ், கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவிலிருந்து விலகி தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவர் இணைந்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரது தலைமையில் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.

Advertisement

ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ முருகுமாறன் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணைந்துள்ள நிலையில், தற்போது வடசென்னையைத் தொடர்ந்து தென் சென்னையிலும் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவது தலைநகரில் அதிமுகவின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்தத் தொடர் விலகல்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in