“குடிக்க காசு தரலன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாரு..” போலீசையே நம்ப வச்ச மனைவி.. பிரேத பரிசோதனை அறிக்கையால் அம்பலமான பகீர் நாடகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“குடிக்க காசு தரலன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாரு..” போலீசையே நம்ப வச்ச மனைவி.. பிரேத பரிசோதனை அறிக்கையால் அம்பலமான பகீர் நாடகம்..!!

Published

on

சென்னை விருகம்பாக்கம் கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ்(வயது 34). இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ஹேமாவதி என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே, சுரேஷ் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்ததால், ஹேமாவதி கோபித்து கொண்டு கடந்த 10-ந்தேதி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சுரேஷ் தனது மனைவி ஹேமாவதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த மனைவியிடம் அவர் மீண்டும் மது அருந்த பணம் கேட்டு சண்டையிட்டதாக தெரிகிறது. குடிப்பதற்கு பணம் கொடுக்காததால் துப்பாட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொண்டு சுரேஷ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ஹேமாவதி விருகம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisement

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து எலும்பில் முறிவு, விழா எலும்பு முறிவு ஏற்பட்டு சுரேஷ் உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுரேஷின் மனைவி ஹேமாவதியை அழைத்து விசாரணை நடத்தியபோது, சண்டையில் சுரேஷின் கழுத்தை தனது துப்பட்டாவால் நெரித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ஹேமாவதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவனை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in