LATEST NEWS
“திமுகவுடன் ஆட்சி அமைத்து.. ஜாக்பாட் அடிக்க நினைத்தது யார்..?” இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் சரமாரி கேள்வி..!!
ஜாக்பாட்டில் தான் தவெக ஆட்சிக்கு வந்ததாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துப் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “ஜாக்பாட் அடித்தவர் யார், அதில் ஃபெயிலியர் ஆனவர் யார் என்பது நாடறியும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைத்து ஜாக்பாட் அடிக்க நினைத்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், ஆனால் அவரது முகம் கிழிக்கப்பட்டு திரை விலகிவிட்டது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாகச் சாடியுள்ளார்.
