“வெட்கப்பட வேண்டிய விஷயம் இது…. நம்மவர்கள் குப்பை போடுகிறார்கள்… வெளிநாட்டினர் சுத்தம் செய்கிறார்கள்..” இணையத்தை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வெட்கப்பட வேண்டிய விஷயம் இது…. நம்மவர்கள் குப்பை போடுகிறார்கள்… வெளிநாட்டினர் சுத்தம் செய்கிறார்கள்..” இணையத்தை உலுக்கும் வீடியோ..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு விவாதத்தைத் தூண்டியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரமான ரிஷிகேஷுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் அங்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண்கள் சிலர், கங்கை நதியின் மணல் மற்றும் பாறைகள் நிறைந்த படித்துறை பகுதியில் சிதறிக் கிடந்த குப்பைகளைக் கண்டு தாங்களாகவே முன்வந்து அவற்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். கையுறைகளை அணிந்தபடி, பெரிய கருப்பு நிற குப்பைப் பைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் மற்றும் இதர கழிவுகளை அவர்கள் சேகரித்தனர்.

Advertisement
https://www.instagram.com/reel/DftCF0FooYL/?utm_source=ig_web_button_share_sheet

இந்த காட்சியை அங்கிருந்த பிரசன் குமார் என்ற இளைஞர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, கடந்த 20-ம் தேதி அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த வீடியோவில், “வெளிநாட்டினர் நமது நாட்டின் பாரம்பரிய இடத்தைச் சுத்தம் செய்கிறார்கள். ஆனால், நம்மவர்கள் இங்கு குப்பைகளை வீசிச் செல்கிறார்கள். நமது பாரம்பரியத்தைக் காக்க முயற்சி செய்வோம்” என அவர் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் வைரலான நிலையில், பொதுமக்களின் குடிமைப் பொறுப்பு குறித்து சமூக வலைதளங்களில் தீவிர விவாதம் எழுந்துள்ளது. வெளிநாட்டு பயணிகளின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் அதே வேளையில், புனிதத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் குப்பை கொட்டுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in