மனசாட்சி இருக்கா..? ₹10 லட்சம் செலவு பண்ணி திருமணம் செஞ்சா.. நாய் சாப்பிடும் பாத்திரத்தில் உணவு… மணமக்கள் வீட்டாருக்கு நேர்ந்த அருவருப்பான செயல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனசாட்சி இருக்கா..? ₹10 லட்சம் செலவு பண்ணி திருமணம் செஞ்சா.. நாய் சாப்பிடும் பாத்திரத்தில் உணவு… மணமக்கள் வீட்டாருக்கு நேர்ந்த அருவருப்பான செயல்…!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், நாயின் கால் தடங்கள் பதிந்த பாத்திரத்தில் விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டதாக எழுந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரேலியின் பிலிபித் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ‘ஸ்பர்ஷ் லான்’ (Sparsh Lawn) என்ற இடத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சுமார் ₹10 லட்சத்திற்கும் அதிகமாகச் செலவு செய்து மண்டபத்தை முன்பதிவு செய்திருந்த நிலையில், விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஊழியர் ஒருவர் பெரிய எவர்சில்வர் பாத்திரத்தில் காய்கறி எடுத்து வந்துள்ளார். அந்தப் பாத்திரத்தின் வெளிப்புறத்தில் நாயின் கால் தடங்கள் தெளிவாகப் பதிந்திருந்ததைக் கண்ட விருந்தினர்கள் அதிர்ச்சியடைந்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதை வீடியோவாகப் பதிவு செய்த விருந்தினர்கள், நாய்களுக்கு உணவு வைக்கும் பாத்திரத்தில் தங்களுக்குப் பரிமாறுகிறீர்களா எனக் கேள்வி எழுப்பியபோது, தவறுதலாக நடந்துவிட்டதாக ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், விழாவில் அரைவேக்காடான சாதம் பரிமாறப்பட்டதாகவும், உணவின் தரம் குறித்துப் புகார் அளித்தபோதும் முழுத் தொகையையும் செலுத்துமாறு நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாகவும் மணமக்கள் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். மண்டப நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in