LATEST NEWS
“படிச்சி படிச்சி சொன்னேனே சாமி, கேட்டீங்களா..? அய்யயோ போர் நீடிக்க இதுதான் காரணமா? பகீர் கிளப்பும் டிரம்ப்..!!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றியே பங்குச்சந்தை வீழ்ச்சிக்கும், ஈரான் போர் நீடிப்பதற்கும் காரணம் என அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 258 இடங்களைக் கைப்பற்றி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியினரை ஈரான் தலைவர்கள் பலவீனமானவர்களாகக் கருதுவதால் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் ஈரான் அதிக அளவில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியபோதிலும், அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தலுக்கு முன்பே தாம் எச்சரித்தபடியே பங்குச்சந்தை சரிந்துள்ளதாகவும், ஆனால் ஜனநாயகக் கட்சியினரும் ஈரானும் எண்ணெய் விலையை உயர்த்த முயன்றபோதிலும் தற்போது எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வாக்காளர்கள் வாக்களிக்கும் முன்பு இந்த விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் போனது வருத்தமளிப்பதாகவும், இந்தத் தேர்தல் மிகவும் விசித்திரமாக அமைந்ததாகவும் டிரம்ப் விமர்சித்துள்ளார். இருப்பினும், இறுதியில் அமெரிக்காவே வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
