LATEST NEWS
“கருணாநிதியாலேயே ஒண்ணும் பண்ண முடியல.. நீங்க எம்மாத்திரம்?” வைகோ எங்க போனாலும் காலிதான்… • மேடையில் அதிரடி கிளப்பிய அ.தி.மு.க.வின் காளியம்மாள்…!!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பேச்சாளர் காளியம்மாள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். த.வெ.க. ஆட்சியைக் கலைப்பது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், வைகோ எங்குச் சென்றாலும் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டுத்தான் வருவார் என்பதால் அவரே இந்த ஆட்சியை முடித்து வைத்துவிடுவார் என்றும் காளியம்மாள் கிண்டலாகப் பேசினார்.
மேலும், எதிர்க்கட்சிகளை விமர்சித்த அவர், “கருணாநிதியாலேயே எங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை, நீங்களெல்லாம் எம்மாத்திரம்?” எனக் கேள்வி எழுப்பினார். அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த அவரது இந்தப் பேச்சு மேடையில் இருந்த தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.
முன்னதாக, த.வெ.க. தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளை வைகோ கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது இரு தரப்பையும் இணைத்து காளியம்மாள் பேசியுள்ள கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
