LATEST NEWS
1 இல்ல 2 இல்ல 15 பெண்களை ஏமாற்றித் திருமணம்… அந்தரங்க வீடியோவை காட்டி மிரட்டி இளைஞர் செய்த காரியம்… போலீசில் சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த 35 வயது நரேந்திர சர்மா என்பவர், 15 பெண்களைத் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. உத்தரப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை இவர் குறிவைத்துத் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டி அவர்களை மிரட்டிய நரேந்திர சர்மா, அதன் மூலம் சுமார் ரூ.18 லட்சம் வரை பணம் பறித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரது மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நரேந்திர சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
