CRIME
பகீர்.. உள்பக்கமாக பூட்டிய அறையிலிருந்து வீசிய துர்நாற்றம்.. கதவை உடைத்துப் பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. பல நாட்களாக அழுகிய சடலம்.. மாணவர் விடுதியில் பயங்கர சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூர் கலா பகுதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியில் உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து 30 வயதான டெலிவரி ஊழியரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கேசவ் வர்மா என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விடுதியின் அறையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த சக மாணவர்கள், உடனடியாக விடுதி நிர்வாகம் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கேசவ் வர்மா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் கடைசியாக நவம்பர் 19-ஆம் தேதி காணப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள் குழுவினர், அறையிலிருந்த தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
கேசவ் வர்மா உயிரிழந்து பல நாட்கள் ஆகியும், விடுதியில் தங்கியிருந்த அவரது இல்லாமையை சக மாணவர்களோ அல்லது விடுதி நிர்வாகமோ ஏன் கவனிக்கவில்லை என்பது இந்த வழக்கில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறையின் முழுமையான விசாரணைக்குப் பிறகே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
