அய்யோ கொடுமையே…! சந்தோஷமாக சுற்றுலா சென்ற மாணவர்கள்… ஒரே ஒரு நிமிடத்தில் மாறிய விதி.. நெஞ்சைப் பதறவைக்கும் கோர விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ கொடுமையே…! சந்தோஷமாக சுற்றுலா சென்ற மாணவர்கள்… ஒரே ஒரு நிமிடத்தில் மாறிய விதி.. நெஞ்சைப் பதறவைக்கும் கோர விபத்து..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலையில் நவம்பர் 24-ஆம் தேதி காலை நிகழ்ந்த கோர விபத்து நான்கு குடும்பங்களின் மகிழ்ச்சியைப் பறித்துள்ளது. சுற்றுலா முடித்துவிட்டு கௌசாம்பிக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஓரியண்டல் பப்ளிக் பள்ளிப் பேருந்தில் சுமார் 50 மாணவர்களும் 6 ஆசிரியர்களும் பயணம் செய்தனர். ததியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மைல்கல் 210 அருகே, மாணவர்கள் கழிவறை செல்ல வேண்டியிருந்ததால் பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது ஆக்ரா தரப்பிலிருந்து உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி ஒன்று, நிறுத்தப்பட்டிருந்த பள்ளிப் பேருந்தின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த மோதலின் வேகத்தில் பேருந்தின் பின்பகுதி முற்றிலுமாகச் சிதைந்து போனது.

விபத்தைத் தொடர்ந்து பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் இடையே பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதுடன், பல குழந்தைகள் இருக்கைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டனர். சாலையில் சென்ற உள்ளூர் மக்கள் மாணவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் நிர்வாகக் குழுவினர், ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்த 21 மாணவர்களைத் திர்வாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் குழுவினர் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisement

இந்தத் துயரச் சம்பவத்தில் 14 வயதான ஆர்யன் சௌராசியா, 18 வயதான ரஜியுல்லா, 17 வயதான ஜைத் மிர்சா மற்றும் 17 வயதான அர்மான் ஆகிய நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். கௌசாம்பி மற்றும் ஃபதேபூர் பகுதிகளைச் சேர்ந்த இவர்களின் உடல்கள் திர்வா மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா சென்ற பிள்ளைகள் வீடு திரும்புவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த நான்கு குடும்பங்களில் தற்போது மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது; அதேநேரம் காயமடைந்த மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். மீட்புப் பணிகளை நிறைவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in