கொளத்தூர் இடைத்தேர்தலில் திடீர் டுவிஸ்ட்..! வாரிசுக்கு வாய்ப்பா? அல்லது மக்கள் செல்வாக்கு பெற்ற மாவட்டச் செயலாளருக்கா..? முதல்வர் விஜய்யின் பரபரப்பு ஆலோசனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கொளத்தூர் இடைத்தேர்தலில் திடீர் டுவிஸ்ட்..! வாரிசுக்கு வாய்ப்பா? அல்லது மக்கள் செல்வாக்கு பெற்ற மாவட்டச் செயலாளருக்கா..? முதல்வர் விஜய்யின் பரபரப்பு ஆலோசனை..!!

Published

on

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் வி.எஸ். பாபு (75) கடந்த நவம்பர் 19, 2026 அன்று காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாகத் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, அங்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக சார்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர் யார் என்பது குறித்துக் கட்சிக்குள் கடும் எதிர்பார்ப்பும் போட்டியும் நிலவி வருகிறது.

மறைந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் மகன் வி.எஸ்.பி. சதீஷ்குமாருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய காலம் முதலே கட்சியில் தீவிரமாகப் பணியாற்றி வரும் கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளரும் மாவட்டச் செயலாளருமான தணிகாவின் பெயரும் தற்போது வேட்பாளர் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. வி.எஸ். பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காலத்திலும் தொகுதி மற்றும் கட்சிப் பணிகளைத் தணிகா முன்னின்று கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்தச் சூழலில், மாவட்டச் செயலாளர் தணிகாவுக்குத் தொகுதி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் ஆதரவும் இருப்பதாக முதலமைச்சர் விஜய்க்கு அறிக்கை சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அனுதாப வாக்குகளைக் கருத்தில் கொண்டு வி.எஸ். பாபுவின் மகனுக்கு வாய்ப்பளிப்பதா அல்லது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கு மதிப்பளித்து மாவட்டச் செயலாளர் தணிகாவைக் களமிறக்குவதா என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in