LATEST NEWS
“தப்பிக்கவும் முடியாது, தப்புவிக்கவும் முடியாது” கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் அமைச்சர் வன்னி அரசு அதிரடி எச்சரிக்கை..!!
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது, அவர்களைத் தப்புவிக்கவும் முடியாது என அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் மற்றும் எம்எல்ஏ மீதான நடவடிக்கை குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, “தவறு செய்தால் எஃப்.ஐ.ஆர் (FIR) போட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் கூடுதலாக இன்றைக்கு நீதிமன்றமும் வழிகாட்டியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை ஐ.ஜி. பிரவீன் குமார் அபினவ் தலைமையில் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். கட்டாயம் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம்தான் அரசும் நிற்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நிற்போம் என்பதற்கு இது ஒரு முன் உதாரணம் எனத் தெரிவித்த அவர், இவ்விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது, தப்புவிக்கவும் முடியாது எனக் கறாராகக் கூறியுள்ளார்.
