LATEST NEWS
FLASH : எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் முடிவு..? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்…!!
பாலியல் புகார் மற்றும் சர்ச்சையில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சிக்கும் ஆட்சிக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் பேரில், அருள் விக்னேஷ் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அவருக்குச் சம்மன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாகச் சட்டரீதியான பிடி இறுகியுள்ளது.
இதனிடையே, அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தக் காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கைது நடவடிக்கை எந்த நேரத்திலும் பாயலாம் என்ற சூழல் உருவாகியுள்ளதால், அதற்கு முன்பாகவே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய அருள் விக்னேஷ் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
