“சிக்கியது 10 ரகசிய Files” தவெக அமைச்சர்கள், MLA-க்களுக்கு ஆப்பு.. அதிமுக விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. அடுத்த தலைவலியில் CM விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சிக்கியது 10 ரகசிய Files” தவெக அமைச்சர்கள், MLA-க்களுக்கு ஆப்பு.. அதிமுக விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. அடுத்த தலைவலியில் CM விஜய்..!!

Published

on

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தங்களது கட்சி எம்.எல்.ஏ-க்கள் என்ன தவறு செய்தாலும், அதைத் தவெக தலைமை கண்டுகொள்ளாமல் அனுமதிப்பதே மாநிலத்தில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என அதிமுக தரப்பைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தவெக தரப்பிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும், இது ஒரு தொடக்கம் மட்டுமே எனத் தெரிவித்துள்ள அவர், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் குறித்த ஆதாரங்கள் அடங்கிய 10 புதிய கோப்புகள் (Files) அதிமுக வழக்கறிஞர்கள் வசம் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார். இந்த ஆவணங்களைக் கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது அடுத்தடுத்து சட்டரீதியான வழக்குகள் தொடரப்படும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in