CRIME
அம்மாடியோ.. சக ஊழியரைக் கேலி செய்ய எடுத்த அந்த ஒரு கருவி… அடுத்த நொடியே பற்றிய தீ.. கடைசியில் நடந்த செம ட்விஸ்ட்.. சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ!
துணிக்கடை ஒன்றில் சக ஊழியர் மீது தீப்பிழம்புகளை வீசும் கருவியை வைத்து விளையாட்டாகத் தீயைப் பற்றவைத்த ஊழியரின் பொறுப்பற்ற செயலால், கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பணியிடத்தில் சக ஊழியரைக் கேலி செய்யும் விதமாக, தீயை உமிழும் கருவியை எடுத்து அவர் மீது விளையாட்டாகப் பயன்படுத்தியுள்ளார் ஒரு ஊழியர். ஆனால், அந்த விளையாட்டு விபரீதத்தில் முடிந்து, அங்கிருந்த ஆடைகளில் தீப்பற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் கடை முழுவதும் மளமளவெனப் பரவத் தொடங்கியது.
துணிகள் நிறைந்த கடை என்பதால் தீ வேகமாகப் பரவி பெரும் விபத்து ஏற்படும் அபாயச் சூழல் உருவானது.அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்த மூன்றாவது ஊழியர் ஒருவர் சற்றும் பதறாமல் சமயோசிதமாகச் செயல்பட்டு, கடையிலிருந்த தீயணைப்புக் கருவியை எடுத்துத் தீயை உடனடியாக அணைத்தார். அவரது துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டதோடு, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதக் காயமும் ஏற்படாமல் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பணியிடங்களில் ஆபத்தான கருவிகளைக் கையாளும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும், விளையாட்டுத்தனமான செயல்கள் எத்தகைய பெரிய பேரிடரை விளைவிக்கும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
