LATEST NEWS
BREAKING: திமுகவில் அடுத்த ஷாக்… கே.என். நேருவின் சகோதரரது உதவியாளர் கைது…!!!
திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் சகோதரரது உதவியாளர் கவி பிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடு மற்றும் பணி நியமன முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கவி பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தி, வழக்கு தொடர்பான முக்கிய வாக்குமூலங்களைப் பெற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த முறைகேடு வழக்குகளில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் குறித்த விவரங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே பல்வேறு சோதனைகளால் பரபரப்பான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது உதவியாளர் கைது செய்யப்பட்டிருப்பது திமுக வட்டாரத்திலும் குறிப்பாக கே.என். நேரு தரப்பிலும் பெரும் நெருக்கடியையும் அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
