CRIME
ஐயோ கடவுளே.. ஆசைப்பட்டு கரும்பு ஒடித்த சிறுவர்களைத் துரத்திய விவசாயி… இரண்டு நாட்களாகத் தேடப்பட்ட 2 மதரஸா மாணவர்கள்… குளத்திற்குள் அடுத்தடுத்து காத்திருந்த நெஞ்சை உலுக்கும் காட்சி..!!
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில், கரும்புத் தோட்டத்தில் கரும்பு ஒடித்த சிறுவர்களை விவசாயி துரத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், பயந்து ஓடி மாயமான இரண்டு மதரஸா மாணவர்கள் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிவான் பகுதியில் உள்ள மதரஸா ஒன்றில் பயின்று வந்த ஐந்து சிறுவர்கள், தங்களது மதரஸாவிற்காகக் கிராமத்தில் நன்கொடை வசூலிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது வழியில் இருந்த கரும்புத் தோட்டத்தைப் பார்த்த சிறுவர்கள், சாப்பிடும் ஆசையில் அங்கிருந்த சில கரும்புகளை ஒடித்துள்ளனர். இதனைப் பார்த்த தோட்டத்து விவசாயி சிறுவர்களைத் துரத்தியதாகக் கூறப்படுகிறது; இதில் மூன்று சிறுவர்கள் தப்பித்து மதரஸாவிற்கு ஓடிவந்துவிட்ட நிலையில், முகமது சயீத் அலி மற்றும் அஷ்ரப் அலி ஆகிய இரண்டு சிறுவர்கள் மாயமாகினர்.
இதனையடுத்து மதரஸா நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மாயமான சிறுவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். சுமார் இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, அருகிலுள்ள குளம் ஒன்றிலிருந்து முகமது சயீத் அலியின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் மற்றொரு சிறுவனான அஷ்ரப் அலியும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். வெறும் கரும்பு ஒடித்ததற்காகத் துரத்தப்பட்ட சிறுவர்கள் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
