“அதிரடி தீர்ப்பு”… திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவைக் கலைத்தது உச்சநீதிமன்றம்… மலைப் பகுதி முழுவதையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் எடுத்து தீபம் ஏற்ற உத்தரவு…!! – cinefeeds
Connect with us

DEVOTIONAL

“அதிரடி தீர்ப்பு”… திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவைக் கலைத்தது உச்சநீதிமன்றம்… மலைப் பகுதி முழுவதையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் எடுத்து தீபம் ஏற்ற உத்தரவு…!!

Published

on

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற முந்தைய உத்தரவு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. உத்தரவுகள் மெத்தனமாகக் கையாளப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும், இவ்விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பழியைக் கோவில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயன்றதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அறங்காவலர் குழுவைக் கலைத்த உச்சநீதிமன்றம், அதில் உள்ள அனைவருக்கும் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரவைச் செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி உரையாடல்களைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், மலை அமைந்துள்ள முழுப் பகுதியையும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துச் சென்று, மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அதன் செயல்பாடுகளிலோ தொழுகைக்கு வருபவர்களுக்கோ எந்தத் தடையும் ஏற்படாமல் சிஆர்பிஎப் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்கா மற்றும் கோவில் பகுதிகளைப் பிரிக்கும் வகையில் வேலி அமைக்கவும், தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இடங்களில் விளக்கு ஏற்றலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in