LATEST NEWS
FLASH: “தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்து கட்சிகளும் எதிர்க்க வேண்டும்!” -CJP பரபரப்பு அறிக்கை..!!
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, தொகுதி மறுவரையறை மசோதாவை அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகத் தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கட்சி தனது அறிக்கையில் அச்சம் தெரிவித்துள்ளது.
எனவே, இதுபோன்ற ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்க, எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் அரசியல் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரள வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
