LATEST NEWS
“ஆதரவு நிலையில் இருந்து திடீர் மாற்றம்”.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் பிரகாஷ் ராஜ்…!!
நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவளிக்கும் திமுகவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார். பாஜக அவசர அவசரமாக சில திருத்தங்களுடன் கொண்டு வரும் இந்த மசோதா, மதம், மொழி, இனம், சிறுபான்மையினர் மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் ராஜ், இத்தகைய ஆபத்துகளை முன்னர் சுட்டிக்காட்டிய திமுக, இப்போது மதவாத சக்திக்கு துணை போவது முதுகில் குத்தும் செயலாகும் என்றும், மக்களுக்குத் துரோகம் இழைக்கும் சுயநல முடிவை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளுக்காகப் போராடி நாட்டுக்கு வழிகாட்டிய கட்சி இதுபோன்ற வரலாற்றுப் பிழையான முடிவை எடுக்கக் கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இந்த முடிவு எதிர்காலத் தலைமுறையின் நலனைத் தீர்மானிக்கக் கூடியது என்பதால், வரும் தலைமுறை தங்களை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்பதை திமுக தலைமையே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
