LATEST NEWS
“இனி நீ என் மகளே இல்லை..” முகத்தில் ஆசிட் வீசி உருவத்தைச் சிதைத்த காதலன்… சிறையிலிருந்து வந்ததும் இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் தந்தை.. திடுக்கிடும் பின்னணி..!!
துருக்கி நாட்டில் தனது முகத்தில் ஆசிட் வீசி நிரந்தரமாக உருவத்தைச் சிதைத்த முன்னாள் காதலன் சிறையிலிருந்து வெளியே வந்த உடனேயே, அந்த இளம்பெண் அவனையே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்ட விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 வயதான பெர்வின் என்ற அந்த இளம்பெண்ணை அவரது காதலன் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்த நிலையில், ஒருமுறை முகத்தில் குத்தி மூக்கை உடைத்ததால் அவனை விட்டுப் பிரிய பெர்வின் முடிவெடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், தன்னுடன் சேர்ந்து வாழாவிட்டால் பெர்வினையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்ததுடன், ஒருநாள் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெர்வினின் முகத்தில் ஆசிட் வீசினான்; இந்தக் கொடூரத் தாக்குதலில் பெர்வினின் வலது கண் பார்வை பறிபோனதுடன் முகமும் கடுமையாகச் சிதைந்தது.
இந்தக் கொடூரச் செயலுக்காகக் கைது செய்யப்பட்ட அந்த நபருக்கு நீதிமன்றம் 13 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்த நிலையில், சிறையிலிருந்தபடியே பெர்வினுக்கு அவன் மன்னிப்புக் கேட்டுக் கடிதங்களை எழுதத் தொடங்கினான். சுமார் 20 பக்கங்கள் வரை நீண்ட அந்த உருக்கமான கடிதங்களைப் படித்த பெர்வின், அவனை மன்னித்ததுடன் தான் இன்னும் அவனைக் காதலிப்பதாகவும், அவனைப் பிரிந்த ஏக்கத்தில் இரவு முழுவதும் அழுவதாகவும் கூறி அவனுக்கு எதிராக அளித்த புகாரையும் திரும்பப் பெற்றார். கொரோனா பெருந்தொற்று காலச் சலுகைகள் காரணமாக மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே சிறையிலிருந்து விடுதலையான அந்த நபரை, தனது தந்தைக்குக் கூடத் தெரியாமல் பெர்வின் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார்.
மகளின் இந்த அதிர்ச்சியூட்டும் முடிவை அறிந்த பெர்வினின் தந்தை கடும் கோபமும் மனவேதனையும் அடைந்து, “இனி நீ என் மகளே இல்லை” எனத் தலைமுழுகியுள்ளார். மகளின் வாழ்க்கை சிதைந்துவிட்டதே எனப் பல நாட்கள் கண்ணீர் விட்டுத் துடித்து, அவளுக்காகப் போராடிய தன்னையும் தன் குடும்பத்தின் உணர்வுகளையும் சிறிதும் மதிக்காமல், தங்களுக்கு இவ்வளவு பெரிய வேதனையைக் கொடுத்த நபரையே மகள் திருமணம் செய்து கொண்டது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் செய்த மாபெரும் துரோகம் என அந்தத் தந்தை குமுறியுள்ளார்; இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களிலும் பலத்த விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
