“படம் இன்னும் முடியவில்லை புரோ!”… தொகுதி மறுவரையறை மசோதா பரபரப்புக்கு இடையே ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அதிரடிப் பதிவு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“படம் இன்னும் முடியவில்லை புரோ!”… தொகுதி மறுவரையறை மசோதா பரபரப்புக்கு இடையே ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அதிரடிப் பதிவு…!!

Published

on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாகக் கூறி அதற்கு ஆதரவு நிலைப்பாட்டை தி.மு.க. வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சென்னை வருகை தருகின்றனர்.

இதற்கிடையே, மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என ராகுல் காந்தி பதிவிட்டதற்கும், அதற்கு மு.க. ஸ்டாலின் பதிலளித்ததற்கும் இடையே, தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு ராகுல் காந்தியை விமர்சித்துப் பதிவு வெளியிட்டது. இந்தப் பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், “படம் இன்னும் முடியவில்லை புரோ” எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தமிழக முதல்-அமைச்சர் விஜய் அடிக்கடி பயன்படுத்தும் ‘புரோ’ என்ற வார்த்தையுடன் ஜெய்ராம் ரமேஷ் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் மற்றும் சென்னை வருகை ஆகியவற்றுக்கு இடையே ஜெய்ராம் ரமேஷின் இந்தப் பதிவு, அடுத்தடுத்து முக்கியத் திருப்பங்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in