திருமணம் முடிந்து ஒரு நாள் கூட நீடிக்காத சந்தோஷம்! காதலனை கரம் பிடிக்க சென்ற பெண்ணுக்கு நே ர்ந்த க தி – cinefeeds
Connect with us

LifeStyle

திருமணம் முடிந்து ஒரு நாள் கூட நீடிக்காத சந்தோஷம்! காதலனை கரம் பிடிக்க சென்ற பெண்ணுக்கு நே ர்ந்த க தி

Published

on

இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர், காதலனை கரம் பிடிப்பதற்காக வங்கதேசத்திற்கு எல்லை தாண்டி சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாம் மாநிலத்தின் Kamrup மாவட்டத்தில்

இருக்கும் Taparpathar கிராமத்தை சேர்ந்தவர் Anjuma Begum. இவர் வங்கதேசத்தில் இருக்கும் தன்னுடைய காதலனை கரம்பிடிப்பதற்காக எல்லை தாண்டி சட்டவிரோதமாக உள்ளே நுழைந்ததால், பொ லிசார் அவரை கை து செய்துள்ளனர்.

Advertisement

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வங்கதேச பொலிசாரால் தேடப்பட்டு வந்த Sattar (27) என்ற நபர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அஸ்ஸாமின் Kamrup-விற்கு தப்பி வந்துள்ளார். அசாமில் சில ஆண்டுகள் கழித்த இவர், அதன் பின் வங்கதேசத்திற்கு திரும்பியுள்ளார். அதன் பின் அந்த நபர் பஹ்ரைனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அசாமில் வந்து இருந்த காலத்தில் Anjuma Begum, இந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். அவன் நாடு திரும்பிய பின்னும் இவர்களின் காதல் சமூகவலைத்தளம் மூலம் தொடர்ந்துள்ளது.

இதை அறிந்த Anjuma Begum-வின் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளூரில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் Anjuma Begum வீட்டில் இருந்து வெளியேறி, வங்கதேசத்திற்கு தப்பிச் சென்று அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார், பிடிபட்டால் மிகப் பெரிய ஆ பத்தை சந்திப்போம் என்று தெரிந்தும், குறித்த பெண் நூற்றுக்கணக்கான மீற்றர் பயணித்து, கடந்த செவ்வாய் கிழமை இளைஞனின் வீட்டை அடைந்தாக கூறப்படுகிறது.

Advertisement

காதலனின் உறவினரின் உதவியால் Anjuma Begum அங்கு சென்றுள்ளார். அதன் பின் இவர்களுக்கு வாட்ஸ் ஆப் வீடியோ மூலம்(டிஜிட்டல் முறை திருமணம்) திருமணம் நடைபெற்றுள்ளது, இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, எவ்வாறாயினும், பயண ஆவணங்களை எடுத்துச் செல்லாமல் நாட்டிற்குள் நுழைந்ததற்காக Anjuma Begum-ஐ பொலிசார் கைது செய்துள்ளனர்,

திருமணம் முடிந்த ஒருநாள் மட்டுமே இவர்கள் சந்தோஷம் நீடித்த நிலையில், தற்போது Anjuma Begum காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் முதலில் எங்கு சந்தித்தனர்? எப்படி காதல் வளர்ந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை, இது குறித்து தகவல் தெரிவிக்க, Anjuma Begum-ன் பெற்றோரை அழைக்க முற்பட்ட போது, அவர்களின் போன் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in