LATEST NEWS
வலிமை ரிலீஸ் பற்றி அஜித் கூறிய ஒரு வார்த்தை??
வலிமை ரிலீஸ் பற்றி அஜித் கூறிய ஒரு வார்த்தை?? கொண்டாடி தீர்த்த தல ரசிகர்கள் !!சமீபத்தில்தான் அஜித் தனது பெயரை தல என்று கூப்பிட வேண்டாம் என்றும் ஏகே அல்லது அஜித்குமார் என்று அழைக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டார் ஆனாலும் இன்று வரை தல ரசிகர்கள் அஜித்தை தல என்று போற்றி வருகின்றனர் இந்நிலையில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் ட்ரெய்லர் பல லட்சங்களைத் தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது ஜனவரி 13-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
குரோனா பரவல் காரணமாக தெலுங்கு படமான RRR தள்ளிபோனது ஆனால் வலிமை குறிப்பிட்ட தேதி கண்டிப்பாக வெளியிடப்படும் என்று தயாரிப்புத் துறை கூறிவந்தது ஆனால் தற்பொழுது வலிமை திரைப்படம் OTT-யில் ரிலீசாகும் என்று ஒருபக்கம் கூறி வந்தாலும் கண்டிப்பாக அந்த படம் தியேட்டரில் தான் வரும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது இந்நிலையில் தியேட்டர்கள் மூடும் அபாயம் இருப்பதால் வலிமை தள்ளிப் போகுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது இது பற்றி விவாதங்கள் நடந்து கொண்டிருக்க அஜித்திடம் ஒரு வார்த்தை கேட்டு இருக்கிறது தயாரிப்புத் துறை.
அதற்கு நடிகர் அஜித் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானது எனவும் தனது திரைப்படம் வெளியானால் யாராவது பாதிக்கப்படுவார்கள் என்றால் அந்தப் படம் வெளியாவதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறி வலிமை திரைப்படத்தை தள்ளி வைக்குமாறு கூறியிருக்கிறார். அஜித் கூறிய இந்த வார்த்தையை ஏற்று வலிமை படத்தை தற்சமயம் ஆக தள்ளி வைத்துள்ளனர் தயாரிப்புத் துறை இதை கேட்டு அறிந்த அஜித்தின் ரசிகர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தன் படத்தை தள்ளிவைத்து இருக்கும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.
