TRENDING
வெளிநாட்டில் பரிதாபமாக தெருவில் அலையும் கணவர்…?? கண்ணீருடன் மனு கொடுத்த மனைவி …?? அதிர்ச்சி வீடியோ …
காரைக்குடி அருகே அரண்மனை சிறுவயலை சேர்ந்தவர் சுரேஷ், இவரது மனைவி சவிதா. இவர்கள் குடும்ப கஷ்டம் காரணமாக வெளிநாட்டில் வேலை செய்ய கணவர் சுரேஷ் போய்விட்டார். ஆனால் அவர் சென்றதோ கொத்தனார் வேலைக்காக தான் அவர் சென்றார் .ஆனால் அந்த வேலயை தராமல் வேறு வேலை செய்ய சொல்லி அடித்து துன்புறுத்தினார்களாம் மேலும் அவரை கைதி போல் நடத்தினார்களாம். அவர்களிடம் இருந்து சுரேஷ் தப்பித்து வெளியே வந்து விட்டாராம் .
ஆனால் அவரால் நம் நாடு வருவதற்கு வழி இல்லாததால் அந்த நாட்டிலேயே ரோட்டில் தங்கி கொண்டு பிச்சை எடுத்து சாப்பிட்டு கொண்டு இருப்பதாக வீடியோ ஒன்றை தான் மனைவிக்கு அனுப்பி வைத்து இருக்கிறார் எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று அழுது கொண்டு வீடியோவை பதிவு செய்து இருக்கிறார். இதனால் பதட்டம் அடைந்த மனைவி சவிதா . தான் கணவரை காப்பாற்ற சொல்லி
சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் தான் கணவர் அனுப்பிய வீடியோவையும் காண்பித்து உள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
