பொன்னியின் செல்வன் பட நடிகையை பார்த்து பொறாமைப்படும் பிரபலம்….. யாருப்பா அது?…. எதுக்கு?….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பொன்னியின் செல்வன் பட நடிகையை பார்த்து பொறாமைப்படும் பிரபலம்….. யாருப்பா அது?…. எதுக்கு?….!!!!

Published

on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயை பார்த்து பொறாமையாக உள்ளதாக நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று ஐந்து மொழிகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் காவியமாக விளங்குகிறது.

Advertisement

நந்தினியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.  இன்று வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து பலரும் பலவிதமான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா இந்த திரைப்படம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார்.

உண்மையாக கூறப்போனால் ஐஸ்வர்யா ராய் பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. என் வாழ்க்கையில் முதல் முதலாக ஒருவரை பார்த்து நான் பொறாமைப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு பொன்னின் செல்வன் கதையிலேயே பிடித்த கதாபாத்திரம் நந்தினி. அந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in