LATEST NEWS
ரஜினியின் அடுத்த இரண்டு படங்கள்….! யார் இயக்கப் போகிறார்கள் தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!
ரஜினியின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார், என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக விளங்குபவர் ரஜினிகாந்த், வயதானாலும் தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தற்போது ரஜினி நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா, வசந்த் ரவி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றன.
பெரும் எதிர்பார்ப்பில் இந்த திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்து இரண்டு படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாகவும்.
அதற்கு அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படங்களை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
