LATEST NEWS
தமிழ்நாட்டில் வந்து உன் வேலையை காட்டுறியா?…. திவ்யாவை மிரட்டும் அர்னவ்….. வெளியான புதிய ஆடியோவால் பரபரப்பு…!!!!
சின்னத்துறையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது நடிகர் அர்னவ் மற்றும் அவரது மனைவி திவ்யாவின் பிரச்சனைதான். சின்னத்திரை நடிகரான அர்னவ், கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்த போது அதில் சேர்ந்து நடித்த சக நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களாக இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றன.
தனது கணவர் கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்தார். ஆனால் தனது மனைவிதான் அவரது நண்பர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டு இதுபோல் நடந்து கொள்வதாகவும் அவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் கூறியுள்ளார் அர்னவ். மேலும் அர்னவ் திவ்யாவுடன் சண்டை போடும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையில் சென்னை காவல் நிலையத்தில் திவ்யா அளித்த புகாரின் பெயரில் அனைத்து மகளிர் போலீசார் அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை மறுத்த அர்னவ் என் மனைவி திவ்யாவை நான் அடித்ததாக போலீசில் கூறிய புகாரில் உண்மை இல்லை. என் விரல் கூட அவர் மீது படவில்லை. அவர்கள் பொய்யான புகாரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும், எனக்கு என் மனைவி வேண்டும்.
என்னுடைய மனைவி குழந்தையை மீட்டு தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் மாநில மகளிர் ஆணையத்தின் நடிகை திவ்யா புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் திவ்யாவை அர்னவ் மிரட்டும் ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நான் தமிழன் என்றும், தமிழ்நாட்டில் வந்து உன் வேலையை காட்டுகிறாயா? என்று அவர் பேசியுள்ளார்.
தன்னை வேண்டுமென்றே திட்டமிட்டு இஸ்லாமியராக மதம் மாற்றி கர்ப்பமடைய செய்து வேறு ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்து வருகிறார் என்று அவர் புகார் அளித்துள்ளார். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். நான் எந்த ஒரு ஆதரவும் இன்றி இருப்பதாகவும் அவர் மகளிர் ஆணையத்தில் புகார் கூறியுள்ளார்.
