LATEST NEWS
வாரிசு திரைப்படத்தில் நம்ம தளபதியின் டான்ஸ்…! சும்மா வேற லெவல்ல இருக்கும்….! ஜானி மாஸ்டர் கொடுத்த ஹைப்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறாத நிலையில். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக மோசமான கருத்துக்களை சந்தித்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் ஹிட்டாக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த மாத இறுதிக்குள் முழு படம் முடியும் நிலையில், பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வாரிசு திரைப்படத்தில் விஜயின் டான்ஸ் வேற லெவலில் இருக்கும் என்று கூறியுள்ளார். இதை பார்த்தால் திரையரங்குகளில் யாரும் உட்கார மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/AlwaysJani/status/1580874080655638534
