ப்ளீஸ்.. பிக்பாஸை விட்டு அனுப்பிராதீங்க…. இனி நான் அப்படி பண்ணமாட்டேன்….. கேமரா முன் கெஞ்சிய தனலட்சுமி…..!!!! – cinefeeds
Connect with us

TRENDING

ப்ளீஸ்.. பிக்பாஸை விட்டு அனுப்பிராதீங்க…. இனி நான் அப்படி பண்ணமாட்டேன்….. கேமரா முன் கெஞ்சிய தனலட்சுமி…..!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து தானாக முன்வந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு இரண்டாவது வாரம் அசல் கோளாறு அவரைத் தொடர்ந்து மூன்றாவது வாரம் செரினா என அடுத்தடுத்து நான்கு பேர் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் விஜே மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள தனலட்சுமி அனைவரிடமும் கோபமாக நடந்து கொண்டு எந்த ஒரு இடத்திலும் பொறுமை இல்லாமல் இருப்பது பலரையும் வெறுப்படைய வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்ததாக பிக் பாஸில் கூறிய நிலையில் அவரை நெருங்கிய தோழி ஒருவர் சமீபத்தில் இது அனைத்தும் பொய், அவள் மிகப்பெரிய பணக்காரி எனக் கூறியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Advertisement

இந்நிலையில் தனலட்சுமி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட வேண்டாம் என்று பிக் பாஸிடம் கேமரா முன் கெஞ்சியுள்ளார். நான் சில நேரங்களில் கோபப்பட்டு பேசி விடுகிறேன். வெளியில் போகிறேன், வெளியில் போகிறேன் என்று அடிக்கடி சொல்லிவிடுகிறேன். இனி நான் அப்படி சொல்ல மாட்டேன். இனி நான் சரியாக இருப்பேன். இதை மட்டும் டிவியில் போடாதீங்க ப்ளீஸ் என்று கெஞ்சி கேட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/BBFollower7/status/1591169665547767808

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in