என்னுடைய பாத்ரூமுக்கு லாக் இல்ல…. அதற்கு இதுதான் காரணம்…. உண்மையை போட்டுடைத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

என்னுடைய பாத்ரூமுக்கு லாக் இல்ல…. அதற்கு இதுதான் காரணம்…. உண்மையை போட்டுடைத்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி….!!!!

Published

on

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட்லக் ஜெர்ரி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் ஜான்வி தற்போது அவரின் அம்மா ஸ்ரீதேவி சென்னையில் வாங்கி வைத்திருக்கும் வீட்டின் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய பழைய நினைவுகளை கொண்டு வரும் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் சீக்ரெட் அரை என அனைத்தையும் காட்டியுள்ளார்.

அதே சமயம் அவரின் அறையில் பாத்ரூமுக்கு லாக் எப்போதும் இருக்காது என அவர் கூறியுள்ளார். அதாவது பாத்ரூமில் பாய் ஃப்ரெண்ட் உடன் பேசக்கூடாது என்பதற்காக ஸ்ரீதேவி அப்படி ஒரு விஷயத்தை செய்ததாக ஜான்விகபூர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in