அன்போடு முத்தம் கொடுத்த குழந்தை…. கண்ணீரோடு வீடியோவை வெளியிட்ட நடிகை திரிஷா….. நெகிழ்ந்து போன ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

அன்போடு முத்தம் கொடுத்த குழந்தை…. கண்ணீரோடு வீடியோவை வெளியிட்ட நடிகை திரிஷா….. நெகிழ்ந்து போன ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இதனிடையே இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல வருடங்களாக படங்களில் தோன்றாமல் இருந்த திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளார். டாப் நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் திரிஷா.

Advertisement

மீண்டும் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிய தொடங்கியுள்ளன. தற்போது விஜயின் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க திரிஷா கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவின் பேனர் புகைப்படத்தை பார்த்து குழந்தை ஒன்று அன்போடு முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த த்ரிஷா கண்ணீர் எமோஜி உடன் எமோஷனலாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை பகிர்ந்து உள்ளார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in