VIDEOS
அம்மாடியோ இவ்வளவு பெரிய வீடா?… குடும்பத்துடன் அசாமுக்கு சென்ற குக் வித் கோமாளி சுனிதா…. வைரலாகும் வீடியோ…..!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா. இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த இவர் குழந்தை போல கொஞ்சும் தமிழில் பேசுவது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வைரல் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக நடித்து வருகிறார்.
அதில் இவர் தமிழில் சொதப்புவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடிக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்திருப்பார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுனிதா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது குடும்பத்துடன் அசாம் டூர் சென்றுள்ள சுனிதா தனது குடும்ப நண்பர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து வைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
