LATEST NEWS
“எனக்கு இருக்கவே புடிக்கல நான் பிக்பாஸ் வீட்டை விட்டு போகணும்”…. கேமரா முன்பு கெஞ்சிய அசீம்…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 50 நாட்களைக் கடந்து 14 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என கமல்ஹாசன் கோபமாக கூறிய நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓரளவு போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம் இந்த வாரம் அசீம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் இவரின் அட்டகாசம் தாங்கிக் கொள்ள முடியாத வகையில் இருக்கின்றது. ஏலியன்ஸ் மற்றும் பழங்குடியின மக்கள் என அவதார் பட கான்செப்டில் இந்த வாரம் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அசீம் இதில் நடந்து கொள்ளும் விதம் சிலரை மகிழ்வித்தாலும் பலரை கோபமடைய வைத்துள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கேமரா முன்பு நின்று தான் வீட்டை விட்டு போகப் போவதாகவும், இந்த கேமை தொடருவதற்கு தனக்கு விருப்பமில்லை, என்னை கூப்பிட்டு பேசுங்கள் பிக் பாஸ் என அசீம் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/gurunathaa4/status/1597983213741559808
